"உக்ரைன் போர்க்களம் மேலும் தீவிரமாகிறது" உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பும் ஐரோப்பிய ஒன்றியம்
ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பும் நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் எடுத்து வருகிறது.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளார்
அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய விமானங்களுக்கு அதன் வான்வெளியை மூடுவதுடன் ரஸ்ய ஊடகங்களை தடைசெய்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னலக்குழுக்களின் தனியார் ஜெட் விமானங்கள் உட்பட, அத்தகைய அனைத்து விமானங்களும் இப்போது எந்த ஐரோப்பிய ஒன்றிய நாட்டிலும் தரையிறங்கவோ, புறப்படவோ அல்லது பறக்கவோ முடியாது என்றும் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இங்கிலாந்து வான்வெளியில் ரஷ்ய விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.