உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல்: தீப்பிளம்பாக பற்றியெரியும் கட்டடங்கள்
உக்ரைன் - ரஷ்ய போர் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனை குறிவைத்து ரஷ்யா இன்று அதிகாலை சரமாரியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ரஷ்யா இதுவரை இல்லாத அளவில், 158 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசித்தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாள், உக்ரைன் கிரிமியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

தீப்பிளம்பாக பற்றியெரியும் கட்டடங்கள்
உக்ரைன் மீதான இந்த தாக்குதலில் 13 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ரஷ்யா, 122 ஏவுகணைகளையும், 36 ட்ரோன்களையும் கொண்டு தாக்கியுள்ளதாகவும், உக்ரைன் விமானப்படை 87 ஏவுகணைகளையும், 27 ட்ரோன்களையும் வழிமறித்துத் தாக்கி அழித்ததாகவும் உக்ரைன் இராணுவ தளபதியான Valerii Zaluzhnyi தெரிவித்துள்ளார்.
இந்த ரஷ்ய தாக்குதலில் கட்டடங்கள் தீப்பிளம்பாக பற்றியெரியும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவரை தன்னுடைய தலைவராக ஏற்றுக் கொண்ட விஜயகாந்த்! கேப்டன் பிரபாகரன் தந்த மாபெரும் வெற்றி - சீமான்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri