உக்ரைன் ஹெலிகொப்டர் விபத்துக்கு காரணம் என்ன - ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்
உள்துறை அமைச்சர் உட்பட 18 பேர் உயிரிழந்த உக்ரைன் ஹெலிகொப்டர் விபத்துக்கான காரணம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் நாட்டில் தலைநகர் கீவின் புறநகர் பகுதியில் ஹெலிகொப்டரொன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியிருந்தது.
இந்த கோர விபத்தில் அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, இராஜாங்க மந்திரி எவ்ஹென் யெனின் உட்பட 18 பேர் பலியானமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடந்து வருகிற உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் காணொளிக்காட்சி வழியாக கலந்து கொண்டு பேசியுள்ளார்.
இதன்போது அவர் உக்ரைன் ஹெலிகொப்டர் விபத்தின் பின்னணி பற்றிய திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். "போர் காலத்தில் நடந்தது விபத்து இல்லை. இந்த சோகம் போரின் விளைவுதான்" என குறிப்பிட்டுள்ளார்.
இதை உக்ரைன் மக்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த விபத்துக்கு போர் தான் காரணம். சம்பவத்தின் போது மிகவும் பனிமூட்டமாக இருந்தது. மின்சாரம் கிடையாது. கட்டிடங்களில் விளக்கு எரியவில்லை" எனவும் தெரிவித்துள்ளார்.