மாஸ்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல்: நகரை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ள விமானங்கள்
உக்ரைன் - ரஷ்யா போர் 18 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீண்டும் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
ரஷ்ய நிலப்பரப்பு மீதான தாக்குதல் போரில் தவிர்க்க முடியாதது என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன்,சுமார் 100 மேற்பட்ட விமானங்கள் தாமதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள ட்ரோன்கள்
இது தொடர்பாக மாஸ்கோ மேயர் தெரிவித்துள்ள தகவலில், நகரை நோக்கி வந்த உக்ரைன் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும், இதனால் 103 விமானங்கள் ரஷ்ய தலைநகரில் இருந்து வெளியேற முடியாமல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டிலிருந்து புறப்பட வேண்டிய 34 விமானங்கள் தாமதமடைந்துள்ளதுடன், 3 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டொமோடெடோவோவில் 63 விமானங்களும், ஷெரெமெட்டியோவில் 6 விமானங்களும் தாமதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |