உக்ரைன் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ரஷ்யா உக்ரைனின் லூகன்ஸ் மாகாணத்தை கைப்பற்றிய நிலையில் டொனெட்க்ஸ் மாகாணத்தில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைவதாலும், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம் என்பதை காரணம் காட்டி, பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு, டொனேட்ஸ்க் மாகாண ஆளுநர் கோரியுள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதல்
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்தும் நடாத்திவரும் இந்த தாக்குதல்களால் பொதுமக்கள் உட்பட்ட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதல்களுக்காக உக்ரைனுக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து வருகின்றன.
இந்த நிலையில் உக்ரைனின் - லூகன்ஸ் மாகாணத்தில், உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமான லிசிசண்ஸ்க் நகரையும் ரஷ்ய படையினர் கைப்பற்றியுள்ளனர்.
உக்ரைன் கோரிக்கை
இதனை தொடர்ந்து லூகன்ஸ் மாகாணத்திற்கு அடுத்த நகரங்கள் மீதும் ரஷ்ய படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கோரப்பட்டுள்ளது.