பிரித்தானிய அரசு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
குழந்தைகளை பாதுகாக்கும் அல்கோரிதங்களை நிரூபிக்க தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானிய அரசு சமூக ஊடக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை பிரித்தானியாவின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான Ofcom, YouTube, Facebook, Roblox போன்ற முக்கிய சமூக ஊடக நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
கடும் எச்சரிக்கை
இணைய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், இவை தங்களது அல்கோரிதங்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களிலிருந்து பாதுகாக்கும் என்பதை நிரூபிக்க வேண்டும்.

தவறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என Ofcom தலைமை நிர்வாக அதிகாரி மெலனி டாவ்ஸ் (Melanie Dawes) தெரிவித்துள்ளார்.
அல்கோரிதம்கள் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கான உள்ளடக்கங்களை பரிந்துரைப்பது குறித்து Ofcom கவலை தெரிவித்துள்ளது.
மேலும், குழந்தைகள் தனிப்பட்ட செய்திகளை பெற முடியாதவாறு பாதுகாப்பு அமைப்புகள் உள்ளனவா என்பதையும் Ofcom ஆராய்கிறது.
அல்கோரிதம்கள் ஆய்வு
இணைய பாதுகாப்பு சட்டத்தின் ஒரு பகுதியாக, Ofcom சமூக ஊடக நிறுவனங்களின் பரிந்துரை அமைப்புகளை “அல்கோரிதம்கள் ஆய்வு” செய்ய உத்தரவிடும் அதிகாரம் பெற்றுள்ளது.

2025 ஜூலை மாதம் முதல், பெரியவர்களுக்கான உள்ளடக்கங்களை குழந்தைகள் அணுக முடியாதவாறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, 12ற்கும் மேற்பட்ட ஆபத்தான இணையதளங்கள் பிரித்தானியாவில் முடக்கப்பட்டுள்ளன, இதில் போர்னோ மற்றும் தவறான முடிவுகள் தொடர்பான தளங்களும் அடங்கும். Ofcom இந்த முயற்சியை “நல்ல தொடக்கம்” எனக் குறிப்பிட்டுள்ளது.
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 10 மணி நேரம் முன்
புடின் பயன்படுத்திய ரகசிய ஏவுகணை... 160 ரஷ்ய எண்ணெய், எரிசக்தி வசதிகளைத் தாக்கிய உக்ரைன் News Lankasri