வடக்கு முதலமைச்சர் யார்? நீதிபதி இளஞ்செழியன் பெயரால் அச்சத்தில் தமிழரசு கட்சி
எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் எந்த சந்தர்ப்பத்திலும் வெளியில் இருந்து யாரையும் இறக்குமதி செய்யமாட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியோடு தொடர்புடைய - கட்சிக்குப் பங்களிப்புச் செய்த பொருத்தமான எவராவது ஒருவரைத்தான் எங்களுடைய முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே இவர் யாரை மனதில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது யாவரும் அறிந்தது.
இவர் ஏற்கனவே டக்ளஸ் தேவானந்தாவை நாடிச்சென்றவர் என்ற நிலையில் தற்போது சுமந்திரனை முதலமைச்சராக்குவதற்காக மகிந்த ராஜபக்சவை நாடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும் தனக்கு ஆதரவான ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக்க இந்தியா முயற்சிக்கின்றது.
இந்தநிலையில் வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக நீதிபதி இளஞ்செழியன் பெயரும் உச்சரிக்கப்படுகின்றது.
எனவே இவரின் பெயரை அனைவரும் முன்மொழிந்து விட்டால் அதற்கு எமது கட்சியும் இணங்க வேண்டும் என்ற பயத்தில் சி.வி.கே. சிவஞானம் அனைவரும் முன்னதாக முதலமைச்சர் வேட்பாளர் விடயத்தில் கருத்துக்களை தெரிவிக்கின்றார்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 22 மணி நேரம் முன்
மகளிர் உலகக்கோப்பை - இந்தியா வெற்றிபெற்றால் மாபெரும் பரிசுதொகையை அறிவிக்க உள்ள பிசிசிஐ News Lankasri
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan