ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை

United Nations M A Sumanthiran United Kingdom ITAK
By Rakesh Mar 25, 2025 05:04 AM GMT
Report

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 59ஆவது கூட்டத் தொடரில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தலை மையப்படுத்திய புதிய பிரேரணையொன்று பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படவுள்ளது.

இதனை பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ - பசிபிக் பிராந்தியப் பணிப்பாளர் பென் மெல்லர், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான ஜனாதிபதி எம்.ஏ.சுமந்திரனிடத்தில் தெரிவித்துள்ளார்.

யாழில் கட்டி வைத்து தாக்கப்பட்ட சிறுமி : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

யாழில் கட்டி வைத்து தாக்கப்பட்ட சிறுமி : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு

அத்துடன், அவர், வடக்கு,கிழக்கில் உள்ள நிலைமைகள் மற்றும் புதிய அரசின் செயற்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்ததோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கீழ் செயற்படும் சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையின் கால நீடிப்பு தொடர்பிலும் பரஸ்பர கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை | Uk Warns Sri Lanka At Unhrc September Meet

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ - பசிபிக் பிராந்தியப் பணிப்பாளர் பென் மெல்லருக்கும், எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது, முதலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் போரவையின் 60 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான தீர்மானத்தை பிரதான அனுசரணையாளர் என்ற வகையில் பிரித்தானியா தலைமை தாங்கிக் கொண்டுவரவுள்ள விடயத்தை பென் மெல்லர் பகிர்ந்துள்ளார்.

அத்துடன், குறித்த பிரேரணைக்கு இலங்கை அரசின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளபோதும் அதற்கான சாதகமான நிலைமைகள் குறைந்தே காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஸ் கிரிக்கெட் வீரர் ஒருவரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு

பங்களாதேஸ் கிரிக்கெட் வீரர் ஒருவரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு

 மனித உரிமைகள் 

எவ்வாறாயினும் இலங்கையில் 'நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தலை' நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் புதிய பிரேரணையைக் கொண்டு வருவதில் பிரித்தானியா கொண்டிருக்கின்ற அர்ப்பணிப்பை வரவேற்ற சுமந்திரன், அதற்கான அவசியத்தையும், சர்வதேச தளத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை | Uk Warns Sri Lanka At Unhrc September Meet

விடேசமாக தற்போதைய அரசு கடந்த கால தவறுகளை சரி செய்து முறைமை மாற்றத்தையே மையப்படுத்தி ஆட்சியில் அமர்ந்தது. இவ்வாறான நிலையில் அந்த அரசாலேயே அதற்கான இலக்குகளை முன்னகர்த்த முடியும் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அதனையடுத்து, பென் மெல்லர் வடக்கு, கிழக்கு மக்களின் நிலைமைகள் தொடர்பில் கேட்டதோடு, அரசின் செயற்பாடுகள் தொடர்பிலும் சுமந்திரனிடம் வினவினார்.

மனித உரிமை மீறல்கள்

இதற்குப் பதிலளித்த சுமந்திரன், வடக்கு, கிழக்கு மக்கள் தமது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான புதிய அரசமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதோடு அதிகாரங்கள் பகிரப்பட்ட சமஷ்டி அடிப்படையிலான நிரந்திரமான தீர்வொன்று இனப்பிரச்சினைக்காக முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை | Uk Warns Sri Lanka At Unhrc September Meet

அதற்காகவே அவர்கள் தொடர்ச்சியாக ஆணை வழங்கி வருகின்றார்கள் என்று குறிப்பிட்டார். அரசைப் பொறுத்த வரையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக மாற்றங்களை எதிர்பார்த்த மக்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தபோதும் அவற்றை இன்னமும் பூர்த்தி செய்யாத நிலைமைதான் நீடிக்கின்றது என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் செய்யப்பட வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த நிலைப்பாடாக இருக்கின்ற நிலையில், சாட்சியங்களைத் திரட்டும் பொறிமுறையின் கால எல்லையையும் நீடிக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாகவுள்ளது என்றும் சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US