பிரதேச சபை செயலாளரின் அடாவடித்தனம் - சினிமா பாணியில் அதிரடி காட்டிய அதிகாரிகள்
கம்பளையில் வலுக்கட்டாயமாக பூட்டப்பட்டிருந்த மூன்று களஞ்சிய அறைகள் அரச அதிகாரிகளால் வலுக்கட்டாயமாக உடைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
உடபலாத பிரதேச செயலாளரால் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த மூன்று களஞ்சிய அறைகள் , அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உள்வாரி கணக்காய்வு அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை வழங்காமல் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
பாவிக்க முடியாத நிலையில் பொருட்கள்
அதில் பெருமளவு பொருட்கள் சேதமடைந்த நிலையில் பாவிக்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த களஞ்சிய அறைகளில் ஏதோ ஒரு காரணத்திற்காக பிரதேச செயலாளரால் பூட்டுகள் இடப்பட்டு, அவை மூடப்பட்டிருந்தன.
எனினும், உடபலாத பிரதேச செயலகத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உள்வாரி கணக்காய்வு அதிகாரிகள், அந்த அறைகளை பரிசோதனை செய்ய முற்பட்டுள்ளனர்.
பிரதேச செயலாளர் கடும் அதிருப்தி
இதன்போது பிரதேச செயலாளரின் அனுமதி அல்லது முன்னிலையின்றி, பூட்டப்பட்டிருந்த 3 களஞ்சிய அறைகளின் பூட்டுக்களும் அதிகாரிகளால் பலவந்தமாக உடைக்கப்பட்டு, சோதனையிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால் உடபலாத பிரதேச செயலாளர் கடும் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.






