சிறையில் நோயால் அவதிப்படும் விஜயதாச ராஜபக்சவின் மகன்..!
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர், ஹரகட்டா' எனப்படும் பாதாள உலக நபரை விடுவிக்க இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்சவிற்கு 'ஸ்லீப் அப்னியா' (Sleep Apnea) எனப்படும் உறக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்படும் நோய் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சரித் அபேசிங்கவிற்கும் இதய நோய் இருப்பதாகவும், ஏற்கனவே மூன்று 'ஸ்டெண்ட்' (Stent) பொருத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் ஐந்து ஸ்டெண்டுகள் பொருத்தப்பட வேண்டியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ரணில் விக்ரமசிங்க கைதான போது அவரது இதய வால்வுகளில் அடைப்பு இருப்பதாகவும், இரத்த ஓட்டத்தில் பாதிப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
அரசியல்வாதிகளுக்கும், முக்கியஸ்தர்களுக்கும் அவர்கள் கைதானதும் இவ்வாறான பல நோய்கள் இருப்பதாக தகவல்கள் வெளிவருவது சாதாரணவிடயமாக மாறிவிட்டது.
இந்தவிடயங்கள் மற்றும், ராஜபக்ச குடும்பம் மற்றும் சர்ச்சைகள்,ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள், என பல விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..