பங்களாதேஸ் கிரிக்கெட் வீரர் ஒருவரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு
பங்களாதேஸ் கிரிக்கெட் வீரர் சாகிப் அல் ஹசனின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அந்த நாட்டின் நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் பிரதமர் சேக் ஹசினாவின் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான அவர், தற்போது நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வருகிறார்.
அதேநேரம் சேக் ஹசீனா, மாணவர் புரட்சியினால் பதவி கவிழ்க்கப்பட்டு தற்போது இந்தியாவில் தங்கியிருக்கிறார்.
சொத்துக்கள் பறிமுதல்
ஹசினாவுடனான அவரது தொடர்புகள் அவரை பொதுமக்களின் கோபத்திற்கு ஆளாக்கின.
அத்துடன், மாணவர் கிளர்ச்சியின் போது போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய கொடூரமான நடவடிக்கைக்காக கொலை விசாரணைகளை எதிர்கொள்பவர்களில் சாகிப்பும் உள்ளடங்குகிறார்.
எனினும், தற்போது 300,000 டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியைக்கொண்ட காசோலைகளைத் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படும் மோசடி குற்றச்சாட்டுகளேயே அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சாகிப்பை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையிலேயே நேற்று இந்த பறிமுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
You May Like This..
