இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ள பிரித்தானியா
இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றம் காரணமாக பிரித்தானியா (United Kingdom) இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) புதுப்பித்துள்ளது.
குறித்த பயண ஆலோசனையானது, லண்டனில் (London) உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் பிரித்தானிய அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கமைய எதிர்வரும் ஏப்ரல் 05 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
ஜனவரி 01 மற்றும் மார்ச் 27இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பிரித்தானியாலிருந்து சுமார் 53,928 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
இதற்கமைய, புதுப்பிக்கப்பட்டுள்ள பயண ஆலோசனையில், அவசரகால மருத்துவச் சேவைகளுக்கான அணுகல், பாதுகாப்புத் தேவைகள், வீதிப் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் சுகாதார வசதிகளுக்கான அணுகல் போன்றவை குறித்த முந்தைய தகவல்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
மேலும், உணவு, எரிபொருள் மற்றும் மருந்துத் தட்டுப்பாடு தொடர்பான தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.
பொருளாதார ரீதியில் இலங்கை தற்போது அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து சுற்றுலாப் பயணிகள் மத்தியில் தெளிவான புரிதலை ஏற்படுத்துவதற்காக, முன்னைய சுற்றுலா ஆலோசனையின் மூலம் வழங்கப்பட்ட தகவல்களை நீக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பிரித்தானியா மூன்றாவது பெரிய நாடாக உள்ள நிலையில் புதுப்பிக்கப்பட்ட சுற்றுலா ஆலோசனையானது இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் பாரிய பங்காற்றுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam
