டியாகோ கார்சியாவில் இலங்கை தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதம்! உறுதிப்படுத்திய நீதிமன்றம்
டியாகோ - கார்சியா தீவில் இலங்கை தமிழர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டதை லண்டன் நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.
இதன்படி, டியாகோ கார்சியா தீவில் தஞ்சம் நாடிய 60இற்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளை இங்கிலாந்து அரசு சட்டவிரோதமாக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்து வைத்திருந்தது என்பதை இங்கிலாந்தின் மேன் முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன், பிரிட்டிஷ் இந்தியன் ஓஷன் டெரிட்டரி (BIOT) ஆணையர் தாக்கல் செய்த மேன்முறையீடும், நீதிமன்றால் முழுமையாக நிராகரிக்கப்பட்டது.
அகதி அந்தஸ்து
இந்தநிலையில், குறித்த தமிழ் அகதிகள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியே செல்ல முடியாத நிலையில் வேலியிட்ட, பாதுகாப்பு காவலுடன் கூடிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இதேவேளை, இது தொடர்பில் கடந்த வருடம் வழங்கப்பட்ட தீர்ப்பின் போது, இந்த தடுத்து வைப்பு பெயரிலேயே இல்லாவிட்டாலும், உண்மையில் சிறை என நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், மேன்முறையீட்டுக்காக மனுதாரரான, ஆணையர் சமர்ப்பித்த ஆதாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஒரு தலைப்பட்சமானவை என நீதிபதிகள் விமர்சித்தனர்.
அத்துடன், ஆணையாளரால் தாக்கல் செய்யப்பட்ட மேன் முறையீடும் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையில், இந்த தீர்ப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டமையால், இங்கிலாந்து அரசு கோடிக்கணக்கான பவுண்டுகளை, அகதிகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri