உடனடியாக கடவுச்சீட்டை புதுப்பிக்கவும்! பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை

Chandramathi
in ஐக்கிய இராச்சியம்Report this article
கோடை விடுமுறையை வெளிநாட்டில் கொண்டாடுவதை தவறவிடாமல் இருக்க பிரித்தானியர்கள் தங்கள் கடவுசீட்டை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடவுசீட்டு அலுவலகத்தில் ஐந்து வார வேலைநிறுத்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
தொழிற்சங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத் தொழிலாளர்கள் ஏப்ரல் 3 முதல் மே 5 வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஊதியம், ஓய்வூதியம், வேலைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக அரசாங்கத்துடன் நீண்டகாலமாக நிலவும் சர்ச்சையை அதிகரிக்கும் வகையில், பொது மற்றும் வணிகச் சேவைகள் (PCS) தொழிற்சங்கம் கடவுசீட்டு அலுவலகத்தில் அதன் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக அறிவித்துள்ளது.
பிரித்தானியா முழுவதும் 4,000-க்கும் அதிகமானோர் கடவுசீட்டு அலுவலகங்களில் பணியாற்றுகிறார்கள்.
அவர்களில், குறைந்தது 1000 பேர், அதாவது நான்கில் ஒரு பணியாளர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடவுச்சீட்டை உடனடியாக புதுப்பிக்கவும்
இதனால் ஏற்படக்கூடிய காலதாமதத்தைத் தவிர்க்க, கடவுசீட்டை உடனடியாக புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொறுமையாக புதுப்பிக்கலாம் என திட்டமிட்டிருந்தால், உங்கள் விடுமுறை கனவு நிறைவேறாமல் போகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடவுசீட்டு புதுப்பித்தல்கள் முடிவடைய 10 வாரங்கள் ஆகும் எனவும் தாமதிக்காமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறும் உள்துறை அலுவலகம் ஏற்கனவே வாடிக்கையாளர்களை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.