பிரித்தானிய கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்
பிரித்தானிய கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
இந்தக் கட்டண உயர்வானது, புதிதாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம் மற்றும் புதுப்பித்தலுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண அதிகரிப்பு விபரங்கள்
இதற்கமைய இணையமூடாக விண்ணப்பிக்கப்படும் கடவுச்சீட்டுகளுக்கு கட்டணம் 75.50 பவுண்டுகளில் இருந்து இனி 82.50 பவுண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
சிறார்களுக்கு 49 பவுண்டுகளில் இருந்து 53.50 பவுண்டுகள் என அதிகரிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கப்படும் கடுவுச்சீட்டுகளுக்கு 85 பவுண்டுகளில் இருந்து 93 பவுண்டுகள் என அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிறார்களுக்கு 58.50 பவுண்டுகளில் இருந்து 64 பவுண்டுகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கான வருவாய்
கட்டண அதிகரிப்பானது குறித்த சேவையை வழங்கும் பணிகளை மேம்படுத்த உள்விவகார அமைச்சகத்திற்கு உதவியாக இருக்கும் என்றே அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த கட்டண உயர்வானது அரசுக்கான வருவாயாக ஒருபோதும் இருக்காது. கடவுச்சீட்டு சேவையை மேம்படுத்த அரசுக்கும் உதவும்.
இந்தக் கட்டண உயர்வானது கடவுச்சீட்டு விண்ணப்பங்களைச் செயலாக்குவதற்கான செலவிற்கும், வெளிநாட்டு தூதரக உதவி பெறுவதற்கும், திருட்டு மற்றும் தொலைந்துபோன கடவுச்சீட்டுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது வழங்கப்படும் அனைத்துக் கடவுச்சீட்டுகளும் மறைந்த ராணியாரின் பெயரிலேயே வெளியாகும் எனவும், 2031 வரையில் செல்லுப்படியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
