குடும்ப விசா தொடர்பிலான புதிய விதியை இடைநிறுத்திய பிரித்தானியா
குடும்ப விசாவில் குடும்ப உறுப்பினருக்கு நிதியுதவி வழங்குவதற்கான குறைந்தபட்ச வருமானத் தேவையை உயர்த்துவதற்கான திட்டங்களை பிரித்தானியா (UK) அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.
இதற்கமைய, பிரித்தானியாவின் நிரந்தர குடியாளர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை பிரித்தானியாவிற்கு அழைத்து வருவதற்கு இனி வருடத்திற்கு குறைந்தபட்சம் 38,700 பவுண்ஸ் அதாவது, 1.48கோடி ரூபாவை செலவிட வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான ரிஷி சுனக்கினால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட குறைந்தபட்ச ஆண்டு வருமான விதியையே தற்போது பிரதமர் கெய்ர் ஸ்டார்மரால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஆண்டு வருமானம்
அதேவேளை, முன்னதாக இருந்த ஆண்டு வருமான வரம்பில் எந்த அதிகரிப்பும் இப்போதைக்கு ஏற்படுத்தப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரித்தானியாவில் தற்போது குடும்ப உறுப்பினர்களை அழைத்து வரத் தேவையான ஆண்டு வருமானம் என்பது 29,000 பவுண்ஸ், அதாவது இலங்கை ரூபாப்படி 1.11 கோடி ஆகும்.
எனவே, இதனை உயர்த்துவதன் மூலம் குடும்பங்களின் மீது ஏற்படும் தாக்கத்தை, குடியிருப்பு ஆலோசனை குழு (MAC) பரிசீலிக்கும் வரை, வரி அதிகரிக்கப்படாத என பிரித்தானிய உள்துறை செயலர் எவெட் கூப்பர் (Yvette Cooper) அறிவித்துள்ளார்.
மேலும், 2023ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து மார்ச் வரையிலான கால கட்டத்தில் மாணவர்களுடன் வரும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 80 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |