ஷேக் ஹசீனாவின் அரசியல் தோல்வியில் வெளிநாடொன்றின் தாக்கம்
பங்களாதேஷில் (Bangladesh) அண்மைக்காலமாக அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்று வரும் மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் (Sheikh Hasina)அரசு பெரும் சவால்களின் மத்தியில் தோல்வியை சந்தித்துள்ளது.
இதன் விளைவாக நாட்டை விட்டே வெளியேறிய அவர் தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
ஹசீனா, தொடர்ந்து உள்நாட்டில் எதிர்க்கட்சிகளின் அழுத்தங்களையும் மக்களின் போராட்டங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
நட்பு நாடுகள்
மேலும், அவர், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையே எதிர்பார்த்திருந்த இராஜ தந்திர கொள்கையும் உரிய முடிவை எட்டவில்லை.
முன்னதாக, பங்களாதேஷூடன் நட்புறவை வெளிப்படுத்தி வந்த சீனா கடந்த மாதம் அங்கு சென்ற ஷேக் ஹசீனாவிற்கு உரிய மரியாதை வழங்கவில்லை எனவும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் அவர் எதிர்பார்த்த சந்திப்பு கூட நடக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, இந்தியாவுடனும் பங்களாதேஷ் பேணி வந்த சிறந்த நட்புறவு குறித்து ஹசீனா கடந்த மாதம் வெளியிட்டிருந்த டீஸ்டா திட்டத்தின் மூலம் அறிய முடிகின்றது.
வெளிநாட்டு சக்தி
இந்நிலையில், பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள இந்த ஜனநாயக மாற்றத்திற்கு வெளிநாட்டு சக்தியின் தாக்கம் இருக்கலாம் என பல்வேறு தரப்பினரால் பேசப்படுகின்றது.
இந்தியா மற்றும் சீனா குறித்த ஷேக் ஹசீனாவின் அறிக்கை வெளிவந்து ஒரு மாதம் காலம் கூட ஆகாத நிலையிலேயே அவரின் அதிகாரத்திற்கு முடிவு கட்டப்பட்டது.
மேலும், பங்களாதேஷின் அரசியல் சீர்குலைவிற்கு வெளிநாடுளின் தாக்கம் இருப்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை என இந்திய தரப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |