பங்களாதேஷில் வெடித்த சர்ச்சையும், சர்வதேச கல்வியின் மீதான தாக்கமும்
நவீன உலகமயமாக்களில் கல்வி என்பது இன்றியமையாத புத்தகங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல.
உலகளாவிய சூழலில் மாணவர்கள் கல்வியை தேடும்பொழுது பல நாடுகளில் உள்ள பல்வேறு வாழ்க்கை முறைகள், கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் அறிவுசார் திறனை வலுப்படுத்துவதற்கான நடைமுறை அறிவைப் பெறுகிறார்கள்.
இன்று மாணவர்களுக்கு இலங்கையில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களை தேடி தமது கல்வி அறிவையும் தமது தகமைகளையும் வளர்த்துக்கொள்ள பல வழிகள் காணப்படுகின்றது.
பெரும்பாலான இலங்கையர்கள் தமது பிள்ளைகளை மேலைத்தேய நாடுகளுக்கு அனுப்புவதை போல பல நடுத்தர குடும்பங்கள் தமது வசதிக்கு ஏற்றவாறு ஆசிய நாடுகளுக்கு அனுப்பும் வழக்கமும் காணப்படுகின்றது. அந்தவகையில் இன்றைய காலங்களில் உயர் கல்வி பயில பங்களாதேஷை நோக்கி படையெடுப்பது அதிகமாகி விட்டது.
மாணவர்கள் போராட்டம்
பங்களாதேசத்தில் கடந்த சில வாரங்களாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம் மற்றும் வன்முறை எதிரொலியாக, அங்கு பயின்ற பல நாட்டின் மாணவர்கள் நாடு திரும்பும் நிலைக்கு உள்ளாகி விட்டனர்.
இருப்பினும் மாணவர்கள் தங்கள் படிப்பை மீண்டும் தொடர ஏதுவாக அங்கு வன்முறை விரைவில் குறையும் என காத்திருக்கிறார்கள்.அவ்வாறு நடுத்தர குடும்ப மாணவர்கள் பங்களாதேஷை தெரிவு செய்வதற்கான காரணங்கள் பின்வருமாறு அமைகிறது.
முதலாவது குறைந்த கல்வி கட்டணம். அதிக தகுதி வாய்ந்த நிபுணர்களின் தேவை அதிகரிப்பதாலும், பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான செலவு வேகமாக அதிகரித்து வருவதாலும், உயர்கல்வி அவசியமாகி வரும் போது, பல்கலைக்கழகங்களின் கல்விக் கட்டணம் குறைவாக உள்ள ஒரே சிறந்த கல்வித் தளமாக பங்களாதேஷ் இன்று காணப்படுகின்றது.
இரண்டாவது, சிறந்த தரவரிசைப் பல்கலைக்கழகங்கள். பாரம்பரிய உலக அளவில் தரவரிசையில் உள்ள பல நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்கு கூடுதலாக, பல பங்களாதேஷ் பல்கலைக்கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய தரவரிசையில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. சில பங்களாதேஷ் பல்கலைக்கழகங்கள் ஆசியாவிலேயே மிகப் பழமையானவை.
முன்றாவது, உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டமை. பங்களாதேஷ் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்கள் அவற்றின் கட்டமைப்பின் அடிப்படையில் நவீனமானவை மற்றும் அவை மாணவர்களுக்கு சிறந்த முறையில் வழங்கப்படுகின்றன.
அவை உலகில் இயங்கிக்கொண்டிருக்கும் மிகவும் புதுப்பித்த அறிவியல் முன்னேற்றங்களைச் சந்திக்கவும், உலகளாவிய சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளக்கூடிய நபர்களுக்குக் கற்பிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சர்வதேச மாணவர்களுக்கான வாழ்க்கைச் செலவு
நான்காவது, மலிவு வாழ்க்கை செலவுகள் பங்களாதேஷில் சர்வதேச மாணவர்களுக்கான வாழ்க்கைச் செலவு மிகவும் குறைவாக காணப்படுகிறது. தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பிற பகுதிகளிலோ அல்லது நகர பகுதிகளிலோ தங்கி வசிப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன.
ஐந்தாவது, பலதரப்பட்ட சமூகம். பங்களாதேஷ் பாரம்பரியமாக மற்ற நாட்டினருக்கு ஒரு மையமாக இருந்து வருகிறது. தஙற்போது, அந்தநாட்டவர்கள் இங்கு வேலை செய்ய வந்த பல வெளிநாட்டவர்களுடன் இணக்கமாக வாழ்கிறார்கள். மற்றும் தங்கள் குடும்பத்துடன் வாழ்கின்றனர்.
கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியம் இன்று, பங்களாதேஷைப் பற்றி நீங்கள் கற்பனை செய்வதை விட குறைவாகவே அறிந்திருக்கிறீர்கள்.
மனிதகுல வரலாற்றின் இன்றியமையாத கட்டங்களில் அரசாங்கம் ஒரு குறிப்பிடத்தக்க பங்காளியாக இருந்து வருகிறது. அவர்களின் பூர்வீகவாசிகள் வரலாற்று, கலாச்சார மற்றும் அறிவியல் இயக்கங்களுக்கு நிகரற்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர், இது உலகளாவிய வரலாற்றின் முழு போக்கையும் மாற்றுகிறது.
UGC தரவுகளுக்கு அமைய , 37 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மாணவர்கள் 2022 இல் கணக்கெடுப்பில் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடர்கிறார்கள். அவற்றுள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், பூட்டான், தெற்கு சூடான், சீனா, ஜப்பான், அமெரிக்கா, எகிப்து, பாலஸ்தீனம் மற்றும் காம்பியா ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.
அரசியல் நிச்சயமற்ற தன்மை
அதிகரித்து வரும் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் சர்வதேச ஜனநாயகத் தர அளவீட்டில் சரிவு இருந்தபோதிலும், பங்களாதேஸஷ் வறுமையைக் குறைப்பதிலும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது.
பங்களாதேஷ் பல ஆண்டுகளாக தனியார் மருத்துவக் கல்வியில் முதலீடு செய்து வருகிறது. பொது சுகாதார துறையை மேம்படுத்துகிறது.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அந்த நாடு ஒரு முக்கியமான கல்வி மையமாக உருவெடுத்துள்ள நிலையில், சமீபத்திய அமைதியின்மை மாணவர்களை கடுமையாக பாதித்துள்ளது.
அந்நாட்டில் நீடித்த வன்முறையால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால், கல்வியை பாதித்த வன்முறை சூழலை சமாளிக்கும் என்று அந்நாட்டு மாணவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |