வியட்நாம் செல்லும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வியட்நாமிற்கு (Vietnam) பயணம் செய்யும் பிரித்தானியர்களின் கடவுச்சீட்டு குறித்து பிரித்தானிய (UK) உள்துறை அலுவலகம் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இதற்கமைய, வியட்நாமிற்கு செல்லும் பிரித்தானியர்கள், வணிகம் தொடர்பான கருத்து வேறுபாடுகள் மற்றும் வாகன விபத்துக்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களில் பதிவாகினால் வியட்நாம் அதிகாரிகள் அவர்களின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்வார்கள்.
அது மாத்திரமன்றி, அவர்களை வியட்நாமை விட்டு வெளியேற அந்நாட்டு அதிகாரிகளால் தடை விதிக்கப்படும்.
மரண தண்டனை
அதேவேளை, இணையதளங்களை அணுகவும், சமூக ஊடகங்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்படும் என்றும், கைத்தொலைபேசிகள் கூட கண்காணிக்கப்படலாம் என்றும் பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், பிரித்தானியர் ஒருவர் வியட்நாமில் போதைப்பொருளை வைத்திருப்பாரெனில் அவருக்கு மரணதண்டனை வழங்கப்படலாம் எனவும் உள்துறை அலுவலகம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டால், ஒரு சட்டத்தரணியின் உதவியை நாடுவதுடன், அருகிலுள்ள பிரித்தானிய தூதரகத்தையோ, துணை தூதரகத்தையோ தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |