உக்ரைனின் ரஸ்யா மீதான தாக்குதல்: அவசரமாக வெளியேற்றப்படும் மக்கள்
ரஷ்யாவின் குர்ஸ்க் (Russia - Kursk) பிராந்தியத்தில் உள்ள ஒரு முக்கியமான பாலத்தின் மீது உக்ரைன் (Ukraine) மேற்கொண்ட தாக்குதலில் ரஷ்யா பாரிய நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
உக்ரேனியப் படைகள் ரஷ்யாவின் குர்ஸ்க் எல்லைப் பகுதிக்குள் நுழைந்தபோதும் ரஷ்யா சனிக்கிழமை உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடர்ந்தது.
இதனை தொடர்ந்து, குர்ஸ்க் பகுதியில் உள்ள பாலத்தை தாக்கி உக்ரைன் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஆயுதம்
முன்னதாக, குறித்த பாலத்தின் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது அமெரிக்காவிடம் (US) பெற்றுக்கொண்ட ஹிமார்ஸ் (HIMARS) ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இந்த தாக்குதலையடுத்து குர்ஸ்க் பிராந்தியத்தை அண்டிய பகுதிகளில் இருந்து மக்களை ரஷ்யா இடம்பெயர்த்து வருகின்றது.
மேலும், அப்பகுதியில் உக்ரைனின் ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட்டு வருவதாகவும் இது ரஷ்யாவுக்கு ஒரு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் குர்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |