பிரித்தானியாவில் தீவிரடமடைந்துள்ள கலவரம்: அவசர கோப்ரா கூட்டத்திற்கு ஸ்டார்மர் மீண்டும் அழைப்பு
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) மீண்டும் இன்றிரவு அவசர கோப்ரா (COBRA) கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பிரித்தானியாவின் சவுத்போர்ட் (Southport) பகுதியில் ஜூலை 29ஆம் திகதி 17 வயது சிறுவன் நடத்திய கொடூர சம்பவத்தின் தொடர்ச்சியாக நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன.
பேரணி கூட்டங்கள்
குறித்த கலவரங்களை கட்டுப்படுத்த பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நேற்று அவசர கோப்ரா கூட்டத்தை கூட்டினார்.
இந்நிலையில் தீவிர வலதுசாரிகள் பிரித்தானியா முழுவதும் மேலும் 30க்கும் மேற்பட்ட பேரணி கூட்டங்களை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.
இது தீவிர வலதுசாரி பேரணிகளின் பெரிய நாளாக என பார்க்கப்படுவதோடு, பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் இன்றிரவு மீண்டும் 2ஆவது முறையாக அவசர கோப்ரா கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் மூத்த பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
COBRA (Cabinet Office Briefing Room A) என்பது உள்நாட்டு அமைதியின்மை, வெள்ளம் போன்ற அவசர சூழ்நிலைகளை கையாளுவதற்கு அழைக்கப்படும் கூட்டமாகும்.
பிரித்தானியாவினல் புதிய அரசாங்கம் அமைந்த சில நாட்களிலேயே கூட்டப்படும் 2ஆவது கோப்ரா இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 29 நிமிடங்கள் முன்

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
