வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பில் பிரித்தானியா புதிய கட்டுபாட்டு நடவடிக்கை
வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களின் திறனை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரித்தானியாவில் அதிகரித்துள்ள புலம்பெயர்வு நிலையை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவின் உள்துறை அமைச்சகம் (Home Office) வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புலம்பெயர்தல் ஆலோசனை
பிரித்தானிய நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள புலம்பெயர்தல் ஆலோசனை குழு (Migration Advisory Committee-MAC) முக்கியத் துறைகளின் திறனின்மைகளை மதிப்பீடு செய்யும் மற்றும் அமைச்சர்களுக்கு சிபாரிசு செய்யும் பணியில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வீசா முதலீட்டாளர்களின் ஆவணங்களைச் சோதிக்கும் பணி தீவிரமாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இவற்றை அடிப்படியாக கொண்டு வெளிநாட்டு தொழிலாளர்களை துன்புறுத்தும் நிறுவனங்களின் அனுமதிகள் இடைநீக்கம் அல்லது இரத்து செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |