ட்ரம்பை கேலி செய்துள்ள பிரித்தானிய ஊடகவியலாளர்
அமெரிக்க (US) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை (Donald Trump) கேலி செய்யும் வகையில் பிரித்தானிய (UK) ஊடகவியலாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
கிரீன்லாந்தும் தனக்கு வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வேண்டுமென்றால் அவர் பிரித்தானியாவையும் வாங்கலாம் என பிரித்தானிய ஊடகவியலாளரான ஜெரமி கிளார்க்சன் என்பவர்
குறிப்பிட்டுள்ளார்.
கிரீன்லாந்தை கேட்ட ட்ரம்ப்...
ரஷ்யா, உக்ரைனை ஊடுருவுவதற்கு பதிலாக, உக்ரைனை வாங்க விரும்புவதாகக் கூறியிருந்தால், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உக்ரைனைக் கொடுத்திருப்பார் என்று கூறியுள்ள குறித்த பிரித்தானிய ஊடகவியலாளர் அதனால் தேவையற்ற பல விரும்பத்தகாத நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.
அதேபோல, ட்ரம்பும், அவருக்கு விருப்பமான எந்த நாட்டையும் வாங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறும் கிளார்க்சன், பிரித்தானியாவையும் அவர் வாங்கலாம் என கேலியாக கூறியுள்ளார்.
மேலும், கால்பந்து அணிகளை வாங்குவது போல, நாடுகளையும் வாங்க அனுமதிக்க வேண்டும் என்று கூறும் கிளார்க்சன், அப்படி செய்வதால் பணத் தேவையிலிருக்கும் நாடுகளுக்கும் பெரும் தொகை கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இப்படி நாகரீகமான முறையில் நாடுகளை வாங்கினால், தேவையில்லாத போர்களையும் தவிர்க்கலாம் என்றும் கிளார்க்சன், உள்ளூர் மக்களிடம் அது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மக்கள் சரி என்று சொல்லிவிட்டால் போதும், நாடுகள் குறித்த வியாபாரம் முடிந்துவிடும் என்றும் கேலி செய்யும் வகையில், கிளார்க்சன் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |