பிரித்தானியாவின் புதிய பொருளாதார தடைகள்: சிக்கலில் சீன நிறுவனங்கள்!
ரஷ்யாவின் (Russia) பாதுகாப்புத் துறைக்கு ஆதரவு வழங்கும் 10 சீன (China) நிறுவனங்களுக்கு புதிய பொருளாதார தடைகளை பிரித்தானியா (UK) விதித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானியாவால் நடைமுறைப்படுத்தப்பட்டு மிகப்பெரிய தடைகளுள் ஒன்றாகும்.
குறித்த பொருளாதார தடைகள் தாய்லாந்து மற்றும் இந்தியாவில் உள்ள சில நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய - உக்ரைன் போர்
இதற்கமைய, இயந்திரங்கள், மின்னணு பொருட்கள், இரட்டை பயன்பாட்டுள்ள உற்பத்திகள் ஆகியவற்றை ரஷ்ய இராணுவத்திற்கு வழங்கும் நிறுவனங்கள் மீதே முக்கிய இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி, இத்தடையகளில், போர் ஆயுத அமைப்புகளில் பயன்படும் Microprocessor க்களும் அடங்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா முன்னெடுக்கும் முழுமையான போர், நான்காம் ஆண்டினை எட்டியுள்ள நிலையில், பிரித்தானிய அரசாங்கம் உக்ரைனுக்கான தனது ஆதரவை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம், வட கொரிய பாதுகாப்பு அமைச்சர் நோ க்வாங் சோல், 11,000 வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பிய பிற அதிகாரிகள் மற்றும் கிர்கிஸ்தானில் உள்ள OJSC Keremet வங்கி ஆகியவற்றுக்கும் தடை விதிப்பதாக பிரித்தானியா அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினை சந்தித்து உக்ரைனின் ஒப்புதல் இல்லாமல் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என்று வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் முடிவடையாத பேச்சுவார்த்தையின் எஜமானர்கள் 10 மணி நேரம் முன்

ரோஹினியை தரதரவென இழுத்து வெளியே தள்ளிய விஜயா, என்ன விஷயம் தெரிந்தது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
