இலங்கைக்கான பயண ஆலோசனைகளை மாற்றியமைத்த இங்கிலாந்து: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இங்கிலாந்து (England) அரசாங்கம் இலங்கைக்கான (Sri Lanka) பயண ஆலோசனைகளை மாற்றியமைத்துள்ள போதிலும் மேலும் மாற்றங்கள் தேவை என்று பிரசாரகர்கள் கோருகின்றனர்.
கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட ஒரு திறந்த கடிதம் ஒன்றில், வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகம் பயண ஆலோசனைகளை புதுப்பிக்குமாறு குறிப்பிட்டிருந்தது.
ஏற்கனவே, இலங்கை தொடர்பில் இங்கிலாந்து வெளியிட்டு வரும் சுற்றுலா பயண ஆலோசனைகள், மிகவும் கடுமையானது, காலாவதியானது மற்றும் செயற்கையானது என்று பிரசாரகர்களின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கள நிலைமை
இந்நிலையில், ஆலோசனை இப்போது சிறிது மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக சாலைத் தடைகள் பற்றிய குறிப்பு திருத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் சிறப்பு அனுபவப் பயணக் குழுவின் முகாமைத்துவப் பணிப்பாளர் சேம் கிளார்க், இந்த ஆலோசனையானது மிகச் சிறந்தவையாக உள்ளதோடு சூழலுக்கு ஏற்றதாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தற்போதைய கள நிலைமையை இந்த ஆலோசனை பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட ஆலோசனை
இதில், அதிகாரிகள் சிறிய அல்லது அறிவிப்பு இல்லாமல் ஊரடங்கு உத்தரவு உட்பட கட்டுப்பாடுகளை விதிக்கலாம் எனவும் ஆர்ப்பாட்டங்கள், அரசியல் எதிர்ப்புகள் அல்லது பெரிய கூட்டங்களைத் தவிர்க்கவும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், புதுப்பிக்கப்பட்ட ஆலோசனையில், எந்தவொரு இடத்திலும் எதிர்ப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் குறுகிய அறிவிப்பில் நடக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்ப்பாளர்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |