இலங்கைக்கான பயணத்தடையை நீடித்தது பிரித்தானியா! - வெளியான அறிவிப்பு
நாட்டில் நிலவும் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, பிரித்தானியா செல்ல விரும்பும் இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு பயணத் தடையை நீடிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, சிவப்பு பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள 64 நாடுகளில் இலங்கையும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இந்த தடை இராஜதந்திரிகள், மருத்துவ சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளிகள் மற்றும் ஏரோநாட்டிக்கல் பொறியாளர்கள் மற்றும் விமானிகள் மற்றும் குழுவினர், வெளிநாட்டு பிபிசி குழுவினர் மற்றும் குடிவரவு மற்றும் குடியேற்ற அதிகாரிகள் போன்ற சில குறிப்பிட்ட தொழில் வல்லுநர்களுக்கு பொருந்தாது.
எனினும், இராஜதந்திரிகள் மற்றும் இங்கிலாந்திற்கு வரும் நோயாளிகளைத் தவிர அனைவரும் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இந்த தடை பூட்டான் தவிர மற்ற ஆறு சார்க் நாடுகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, சிவப்புப் பட்டியலிலிருந்து வெளியேறி, ஞாயிற்றுக்கிழமை முதல் ஆபத்தான நாடுகளின் பட்டியல் (அம்பர்) பட்டியலில் இடம்பெறவுள்ளது.
இருப்பினும், அந்த நாட்டிலிருந்து வருகையாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு PCR சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவர்கள் கோவிட்-19 இல்லாதவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
பசுமை பட்டியலில் உள்ள குடிமக்கள் தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
