அடுத்த வாரம் பதில் கிடைக்கும்.. பிரித்தானிய - கனடாவுக்கு பகிரங்க எச்சரிக்கை
பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் நடவடிக்கைக்கு இஸ்ரேலின் பதில், அடுத்த வாரம் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு தெரிவிக்கப்படும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
பாலஸ்தீன அரசை தனிநாடாக அங்கீகரிப்பதாக பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இன்று அறிவிப்பு விடுத்தன.
இதனை தொடர்ந்தே குறித்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நெதன்யாகு, “ஒக்டோபர் 7ஆம் திகதி அன்று நடந்த கொடூரமான படுகொலைக்குப் பிறகு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் தலைவர்களுக்கு என்னிடம் ஒரு தெளிவான செய்தி உள்ளது.
பாலஸ்தீன அரசு
நீங்கள் பயங்கரவாதத்திற்கு மிகப்பெரிய வெகுமதியை வழங்குகிறீர்கள்” என்று குறிப்பிட்டு நெதன்யாகு காணொளி வெளியிட்டுள்ளார்.
குறித்த காணொளியில், “அது நடக்காது, ஜோர்டானுக்கு மேற்கே ஒரு பாலஸ்தீன அரசு நிறுவப்படாது தனது தலைமையின் கீழ், இஸ்ரேல் யூதேயா மற்றும் சமாரியாவில் யூத குடியேற்றத்தை இரட்டிப்பாக்கியது - மேலும் நாங்கள் இந்தப் போக்கில் தொடர்வோம்.
יש לי מסר ברור לאותם מנהיגים שמכירים במדינה פלסטינית לאחר הטבח הנורא ב-7 באוקטובר: pic.twitter.com/YhrfEHjRhZ
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) September 21, 2025
எங்கள் நிலத்தின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை எங்கள் மீது திணிக்க தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிக்கான பதில், நான் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு வழங்கப்படும், காத்திருங்கள்” என்று நெதன்யாகு கூறியுள்ளார்.
நெதன்யாகுவின் கூட்டணி உறுப்பினர்கள் மேற்குக் கரையின் சில பகுதிகளை, குறிப்பாக ஜோர்டான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைக்க வேண்டும் என்று வெளிப்படையாக வலியுறுத்தி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




