பிரித்தானியா எடுத்த முடிவு: இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையின் முன்னாள் மூன்று தளபதிகள் உள்ளிட்டோர் மீது தடைகளை விதிக்க பிரித்தானியா அரசாங்கம் எடுத்த முடிவு குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியுறவு அமைச்சு அறிவிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் நிலைப்பாடு
முன்னாள் இராணுவத் தளபதிகள் சவேந்திர சில்வா மற்றும் ஜகத் ஜெயசூரிய, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் கருணா அம்மான் என்றும் அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மீது பிரித்தானியா தடைகளை விதித்திருந்தது.
இதனையடுத்து சவேந்திர சில்வா, வசந்த கரன்னாகொட, ஜகத் ஜெயசூரிய மற்றும் கருணா அம்மான் ஆகியோருக்கு பிரித்தானியா விதித்துள்ள தடை தொடர்பில் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கும், சர்வதேசத்துக்கும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தொடர்ச்சியாக பெரும்பான்மையின அரசியல்வாதிகள் பலரும் கோரிக்கை முன்வைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 6 நாட்கள் முன்

அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஆனந்திக்கு ஏற்பட்ட ஆபத்து... பரபரப்பான சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri

இதை படிக்கும்போது நான் உயிருடன் இருக்கமாட்டேன்., சுவிட்சர்லாந்தில் பிரித்தானிய தாயின் துயரமான முடிவு News Lankasri
