ஜனாதிபதி செயலகத்திற்குள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்திய இராணுவ சிப்பாய்
ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முயன்ற இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனது பையில் துப்பாக்கி தோட்டாவை மறைத்து வைத்துக்கொண்டு நுழைய முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவ சமிஞ்சை பிரிவு இணைக்கப்பட்ட ஒரு சிப்பாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு பிரிவு
சந்தேக நபரான சிப்பாய் ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றுகிறார்.
கடந்த 20 ஆம் திகதி, அவர் விடுமுறை பெற்று லுனுகம்வெஹெரவில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று மீண்டும் பணிக்கு வந்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் பொது நுழைவாயிலுக்கு அருகில் சிப்பாயின் பையை சரிபார்க்க ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் ஸ்கேனர் ஒன்றைப் பயன்படுத்தினர்.
பையில் T-56 துப்பாக்கிக்கான தோட்டா கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Post Office திட்டத்தில் தினமும் ரூ.50 முதலீடு செய்து முதிர்ச்சியில் ரூ.35 லட்சம் பெறலாம்! என்ன திட்டம்? News Lankasri
