உகாண்டா அணிக்கு எதிரான சிறப்பான வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்
சர்வதேச கிரிக்கட் அரங்கில் சிறந்த பந்துவீச்சாளர்களை தன்னகத்தே கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி உகாண்டா அணிக்கெதிரான போட்டியில் சிறப்பான ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஆப்கனிஸ்தான் அணியின் ஃபசல்ஹக் பாரூக்கின் சிறப்பான பந்துவீச்சானது உகாண்டா அணியை குறைந்த ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்த வழிவகுத்தது .
மேற்கிந்திய தீவுகளின் பிரவிடன்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழட்சியில் வெற்றிபெற்ற உகாண்டா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதனையடுத்து துடுபடுத்தாடிய ஆப்கானிஷ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்டானது வலுவாக அமைந்திருந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரகமதுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஜத்ரன் ஆகியோர் முதலாவது விக்கெட் இணைப்பாட்டமாக 154 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.
125 ஓட்டங்கள் வித்தியாசம்
இப்ராகிம் ஜத்ரன் 70 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, குர்பாஸ் 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து, களமிறங்கிய நஜிபுல்லா ஜத்ரன் 2 ஓட்டங்களையும் குல்பதீன் நைப் 4 ஓட்டங்களையும் , அஸ்மதுல்லா உமர்சாய் 5 ஓட்டங்களையும் , முகமது நபி 14 ஓட்டங்களையும் , ரஷீத் கான் 2 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்நிலையில் 20 ஓவர் நிறைவில் ஆப்கானிஷ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதையடுத்து, 184 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உகாண்டா அணி களமிறங்கியது. முதல் ஓவரை வீசிய ஃபசல்ஹக் ஃபரூக்கி, ரோனக் படேல் மற்றும் ரோஜரை அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றினார்.
தொடர்ந்து உகாண்டா துடுப்பாட்ட 20 ஓட்டங்களுக்கும் குறைவான ஓட்ட எண்ணிக்கையுடன் ஆட்டமிழந்தனர். 16 ஓவர்களில் 58 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் உகாண்டா அணி இழக்க 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |