ஏமாற்றுக் காரர்களின் தலைவராகவே ரணில் விக்ரமசிங்க செயற்படுகிறார்: உதயகுமார் எம்.பி
ஏமாற்றுக் காரர்களின் கூடாரமாக இந்த அரசு மாறியுள்ள நிலையில், ஏமாற்றுக் காரர்களின் தலைவராகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருகிறார் என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நேற்று(10.08.2024) இடம்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், தொழில் அமைச்சராக செயற்பட்ட மனுஷ நாணயக்காரவும் கொட்டகலைக்கு வருகைதந்து 1,700 ரூபா வழங்கப்படும் என உறுதியளித்தனர்.
மக்களை ஏமாற்றி பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சமைத்து நாடகங்களையும் அரங்கேற்றினர்.

எனினும், இது ஏமாற்று நடவடிக்கை என்பது தற்போது உறுதியாகியுள்ளது. சம்பள உயர்வு தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்கூட மீளப்பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு மலையக மக்களுக்கு துரோகம் செய்ததால்தான் இன்று நாடாளுமன்ற உறுப்புரிமையைக்கூட மனுஷ நாணயக்கார இழந்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வீட்டுக்கு அனுப்படுவார், அதன்பின்னர் பொதுத்தேர்தலில் மலையக அமைச்சரின் கட்சியும் காணாமல் ஆக்கப்படும்.
அத்துடன், தமக்கு துரோகம் இழைந்த இந்த மூன்று தரப்புகளுக்கும் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.”என அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam