தேர்தல் கால அரசியல்வாதிகள் போல் எமது செயற்பாடுகள் அமையாது: பாரத் அருள்சாமி
தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ்ப் பிரதிநிதி புராணம் பாடிவிட்டு காணாமல்போகும் அரசியல்வாதிகள் போல் எமது செயற்பாடுகள் அமையாது என்று இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் கண்டி 'கரலிய' அரங்கத்தில் நேற்று (10) நடைபெற்ற தோட்ட தொழிற்சங்கங்களின் இளம் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ் பேசும் மக்களின் உரிமைகள்
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை ஜனாதிபதி ஏற்றுள்ளார், நெருக்கடியான காலகட்டத்தில் சவாலை ஏற்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட இளம் அரசியல் தலைவர்களுடன் இணைந்து ஜனாதிபதி இந்நாட்டை கட்டியெழுப்பியுள்ளார்.
எனவே, எத்தகைய சவால்களையும் வெற்றிகரமாக சந்திப்பதற்கு இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும்.
கடந்த பொதுத்தேர்தலில் கண்டியில் களமிறங்கிய எனக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் உட்பட கட்சி செயற்பாட்டாளர்கள் பக்க பலமாக இருந்தனர், இளைஞர்கள் உட்பட மக்களும் ஆதரவு வழங்கினர்.

அதனால்தான் முதல் தடவையிலேயே 25 ஆயிரம் வாக்குகளை வரை பெறமுடிந்தது.
அடுத்த முறை நாம் கண்டி மாவட்டத்தில் பிரதிநிதித்துவத்தை பெறுவோம். அதற்கு மக்கள் பேராதரவு வழங்குவார்கள்.
கண்டி மாவட்டத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கான அபிவிருத்திகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளோம்.
அவரும் இதுபற்றி கவனம் செலுத்திவருகின்றார். எனவே, கண்டி மாவட்ட மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் அபிவிருத்தி தேவைப்பாடுகளை நிச்சயம் நாம் நிறைவேற்றுவோம்.

கல்விக்கு தற்போது நாம் முன்னுரிமை வழங்கிவருவதால் கண்டி மாவட்டத்தில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளை மேம்படுத்துவதற்குரிய திட்டங்களும் உள்ளன.
இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவில் சுமூகத்தீர்வு கிட்டும் என நம்புகின்றோம்.
எதிர்வரும் 12 ஆம் திகதி பேச்சுவார்த்தை உள்ளது. இதன்போது இரு தரப்புகளும் இணக்கப்பாட்டுக்கு வந்து, இப்பிரச்சினை தீரும் என உறுதியாக நம்புகின்றோம்.
அத்துடன், தேர்தல்காலங்களில் மாத்திரம் கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் பற்றி பேசுபவர்கள், தேர்தலின் பின்னர் மக்களுக்குரிய சேவைகளை உரிய வகையில் முன்னெடுப்பதில்லை, இவ்வாறான ஏமாற்று அரசியல்வாதிகளுக்கு மக்கள் தக்கபாடத்தை அடுத்த தேர்தலில் புகட்டுவார்கள்.” என அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri