மீண்டும் வரிசை யுகம்! ஜனாதிபதி ரணிலின் கடுமையான எச்சரிக்கை

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis Hatton Sri Lanka Presidential Election 2024
By Benat Aug 11, 2024 09:40 AM GMT
Report

எதிர்வரும் காலத்தில் நாம் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும்.  இல்லையென்றால் கடந்த காலங்களில் போன்று மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும், அடுத்த 10 வருடங்களுக்குள் ஏற்றுமதிசார் பொருளாதாரத்தில் தன்னிறைவை அடைய முடியாவிடின் மீண்டும் எமது நாடு பொருளாதார சிக்கல்களுக்கு   முகம்கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

ஹட்டனில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாமலினால் ராஜபக்ச குடும்பத்திற்குள் குழப்பம்: எதிர்வரும் நாட்களில் அம்பலமாகும் உண்மை

நாமலினால் ராஜபக்ச குடும்பத்திற்குள் குழப்பம்: எதிர்வரும் நாட்களில் அம்பலமாகும் உண்மை

மீண்டும் பொருளாதார நெருக்கடி

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இரண்டு வருடங்களுக்கு முன்பு எமது நாடு எப்படி இருந்தது என்பதை நான் புதிதாக கூறத்தேவையில்லை. இப்போது நாடு இயல்பு நிலைமைக்கு வந்துள்ளது. ஆனால் முழுமையாக நாம் மீளவில்லை.

மீண்டும் வரிசை யுகம்! ஜனாதிபதி ரணிலின் கடுமையான எச்சரிக்கை | Sri Lanka Presidential Election 2024

உலக நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக நாம் கடன்களை பெற்றோம். அவற்றை முறையாக திருப்பி செலுத்துவதற்கான நிபந்தனைகளை மிகவும் கவனமாக நிறைவேற்றினோம். அந்த நாடுகளுடனும் நாணய நிதிய அதிகாரிகளுடன் ஒப்பந்தங்கள் குறித்து மிகவும் சுமுகமாக கலந்துரையாடினோம்

இந்த ஒப்பந்தங்களை நாம் கவனமாக கடைப்பிடித்தால் எதிர்காலத்தில் மேலும் உதவிகளைப்பெறலாம். ஆனால் அவற்றை மீறினால் எதிர்காலத்தில் எமக்கு எந்த வித உதவிகளும் கிடைக்கப்பெறமாட்டாது.

பாருங்கள் நாம் 17 தடவைகள் நாணய நிதிய ஒப்பந்தங்களை மீறியுள்ளோம். இனி அப்படி இடம்பெற்றால் எமது எந்த அனுதாபங்களையும் எவரும் காட்டமாட்டார்கள்.

ஆனால் எதிர்க்கட்சிகள் இதை விளங்கிக்கொள்ளாமல் அவற்றில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று பேசுகின்றனர்.

குறித்த நிகழ்ச்சித் திட்டத்துக்கு அமையவே நாம் பயணிக்க வேண்டியுள்ளோம். மீறினால் மீண்டும் வங்குரோத்து நிலைமைக்கே செல்ல வேண்டும்.

மீண்டும் வரிசை யுகம்! ஜனாதிபதி ரணிலின் கடுமையான எச்சரிக்கை | Sri Lanka Presidential Election 2024

ஆகவே எதிர்வரும் காலத்தில் நாம் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும். இங்கே எம்மத்தியில் உள்ள கேள்வி என்னவென்றால் கடின நிலைமையிலிருந்து மீண்ட நாம் மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்ல வேண்டுமா இல்லையென்றால் முன்னேற்றத்தை நோக்கி செல்லப்போகின்றோமா என்பது தான்.

எமக்கு போதுமான வருமானம் இல்லாத காரணத்தினாலேயே அந்நிய செலாவணியை நம்பியிருக்கின்றோம். பொருட்களை இறக்குமதி செய்கின்றோம். ஆனால் அடுத்த பத்து வருடங்களில் நாம் ஏற்றுமதிசார் பொருளாதாரத்தில் தன்னிறைவை அடைய முடியாவிடின் மீண்டும் எமது நாடு பொருளாதார சிக்கல்களுக்கு முகங்கொடுக்கும்.

சிந்தித்துப்பாருங்கள், நாம் பழைய கடனையும் செலுத்த வேண்டியுள்ளது, எதிர்காலத்தில் பெற வேண்டிய கடன்களையும் செலுத்த வேண்டியுள்ளது.

இதுவே தற்போது எம்மத்தியில் இருக்கக் கூடிய பிரதான இரு பிரச்சினைகள். இவை உங்களுடைய எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகள். ஆகவே தப்பித்து ஓடியவர்கள் இந்த பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க முடியுமா என்பதை சிந்தித்துப்பாருங்கள் என குறிப்பிட்டுள்ளார். 

பலமடையும் சஜித் தரப்பு! அதிகரிக்கும் ஆதரவு

பலமடையும் சஜித் தரப்பு! அதிகரிக்கும் ஆதரவு

மதுபான விலை குறைப்பு குறித்து வெளியான அறிவிப்பு

மதுபான விலை குறைப்பு குறித்து வெளியான அறிவிப்பு

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US