பிள்ளையானால் பழிவாங்கப்பட்ட யாழ். பெண்! தாயை தேடி பரிதவிக்கும் குழந்தைகள்
அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை விடுதலை செய்யுமாறு அவரது மகள் டிலானி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (21) தனது பேத்தியாரான அருனோதயனாதன் ரஜனியுடன் ஊடக சந்திப்பை முன்னெடுத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வமக்கள் கட்சியின் உருவாக்கத்தால் பிள்ளையானுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் எனது தாயார் தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கின்றார்.
கோரிக்கை
எமது தாயார் அரசியல் சூழ்ச்சி காரணமாக சிறையில் இருப்பதால் நாம் நான்கு சகோதரர்களும் பாட்டியின் பராமரிப்பில் தற்போது பல அசௌகரியங்களை சந்தித்தி வருகின்றோம்.

இந்நேரம் சிறையிலிருக்கும் எமது தாயார் குற்றம் செய்யாது சிறையில் இருப்பதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி மருத்துவ வசதி கூட கிடையாத நிலையில் இருக்கின்றார்.
இந்த நிலை அவரது உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.அந்தவகையில் எமது குடும்ப நிலையையும் பிள்ளைகளான எமது நிலையையும் கருத்தில் கொண்டு தாயாரை மனிதாபிமானமான நடவடிக்கையாக விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        