அநுர நீண்ட காலம் சிறையில் இருப்பார்! விடுக்கப்படும் எச்சரிக்கை
ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க நீண்ட காலம் சிறையில் இருப்பார் என எதிர்க் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் அமைச்சரும் பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவரான உதயகம்மன்பில இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பழிவாங்கும் நோக்கில் தற்போதைய ஜனாதிபதி தோண்டும் குழியானது, அவருக்கான புதைகுழி என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு அநுராவிற்கு எதிரான பல வழக்குகளுக்கான பிழையான முன்னுதாரணமாக அமைந்து வருகின்றது என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க சிறையில் தடுத்து வைக்கப்பட்ட காலத்தை 13 ஆல் பெருக்கிக் கொள்ளுமாறும், அந்த நாட்களின் எண்ணிக்கை அநுர சிறையில் இருப்பார் எனவும் உதயகம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டி உள்ளார்.
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam