உதய கம்மன்பில நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பொதுஜன பெரமுன மறுப்பு!
நாடாளுமன்றத்தின் பேச்சாளர் பட்டியலில் இருந்து தமது பெயர் தவிர்க்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில சபாநாயகரிடம் முறையிட்டுள்ளார்.
எரிசக்தி நெருக்கடி தொடர்பான விவாதத்தின் போது நேற்று நாடாளுமன்றத்தில் பதில் உரையை ஆற்றவிருந்ததாக கம்மன்பில ட்வீட் செய்துள்ளார்.
பதவியில் இருந்து நீக்கப்பட்டதால், பேசுவதற்கு நேர அவகாசம் கோரி தாம், மார்ச் 7ஆம் திகதி எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்ததாக முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார்.

எனினும் மார்ச் 8 ஆம் திகதி அரசாங்ககட்சியின் பிரதம அமைப்பாளர் அலுவலகம் தன்னைப் பேச அனுமதிக்க முடியாது என்று தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்தே சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக கம்மன்பில ட்வீட் செய்துள்ளார்.
1,36,331 வாக்குகளைப் பெற்று பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தமக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் பேசுவதற்கான உரிமையை மறுப்பது என்பது தனது வாக்காளர்களின் இதயங்களையும் மனதையும் வெளிப்படுத்த மறுப்பதாகும் என்று அவர் கூறியுள்ளார்.