திறைசேரியில் மாயமான டொலர் :கம்மன்பில அரசாங்கத்திடம் கேட்கும் எட்டு வினாக்கள்
வெளிநாட்டு நிறுவனங்களில் பெற்றுக் கொண்ட கடன்களை திருப்பி செலுத்தும் நடவடிக்கையின் போது திறைசேரியில் இருந்து மாயமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பில் நாங்கள் யாரும் கேட்காத எட்டு கேள்விகளை அரசாங்கத்திடம் கேட்கிறோம் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துறு எல உறுமய கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்துரையாற்றும் போது
அவர் கேட்ட எட்டு வினாக்கள்
1.வெளிநாட்டு கடன்கள் மற்றும் அனைத்து கடன்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு மட்டு பணம் எவ்வாறு செலுத்தப்பட்டது?
2.இந்த கொடுப்பனவை செலுத்தும் போது மூன்றாம் தரப்பு இதை ஹெக்கிங் செய்யக் கூடும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்தும் அதை மறுதலித்து செயற்பட்டது யார்?
3.2025 ஆம் ஆண்டு இந்திய நிறுவனம் ஒன்றுக்கு கடன் தொகை மீள செலுத்தும் போது ஹெக்கர் செய்யக் கூடும் என நிறுத்தப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலிய நிறுவனத்துக்கு பணம் செலுத்த அனுமதி வழங்கியது யார்?
4.பணம் பரிமாற்றத்தில் ஹெக்கிங் நடக்கவில்லை.மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட இலக்கத்திற்கு அதாவது புதிய இலக்கத்திற்கு எங்களாலே பணம் மாற்றப்பட்டுள்ளது.பணம் அனுப்பும் இலக்கத்தை மாற்றுவதற்கு அனுமதியளித்தது யார்?
5.இவ்வளவு பாரிய மோசடியை எதிர்க்கட்சி வெளியில் விடும்வரை அரசாங்கம் ஏன் மறைத்தது.

6.கணக்காய்வு நாயகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டதா?அப்படி இல்லை என்றால் அதற்கான காரணம் என்ன?
7.கணக்காய்வு நாயகத்திற்கு தெரியப்படுத்தப்படாததால் அதன் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அமைச்சின் செயலாளர் பதவி விலக வேண்டும்.அப்படியில்லை என்றால் அதற்கான காரணம் என்ன?
8.நாட்டின் நிதி பரிபாலன கட்டுப்பாடுகள் நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும்.அதனால் நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் ஏன் அறிவிக்கப்பட வேண்டும்.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர திசாநாயக்க தனது பொறுப்பை நிறைவேற்ற தவறிவிட்டார்.நிதியமைச்சர் என்ற வகையில் இந்த மோசடியை மறைத்த குற்றத்திற்காக அந்த பதவியில் இருந்து அவர் விலக வேண்டும்.
அப்படியில்லை என்றால் அதற்கான காரணம் என்ன? இந்த கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூறும் என நாம் நம்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam
ஈரானுக்கு மரண அடி உறுதி... பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு கொந்தளித்த இஸ்ரேல் News Lankasri