ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வர வேண்டும்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் மாணவர்களை அதிபர்கள் தண்டிப்பது போல் சபாநாயகர்களினால் அமைச்சர்களை தண்டிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
சபாநாயகருக்கு அமைச்சர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றின் நம்பிக்கையை மீறி இருந்தால் அவர் பதவியை விட்டு விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு இல்லையெனில் நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர முடியும் என தெரிவித்துள்ளார்.
எனினும் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்பட்டால் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அதனை முறியடிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு கள்வரையும் பாதுகாக்க தேசிய மக்கள் சக்தியினர் ஆயத்தமாக இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஏனெனில் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டாலும் சமூகத்தில் இந்த சம்பவம் தொடர்பான ஒரு அதிர்வலை ஏற்பட்டது எனவும் அதன் விளைவாக அவர் பதவியிலிருந்து நீங்க நேரிட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதி அமைச்சராக கடமையாற்றி வரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதே பொருத்தமானது என உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri