ரணிலின் சூழ்ச்சியில் சிக்கிய தமிழ் அரசியல்வாதிகள்! ஈழத்தமிழருக்கு ஆபத்தாகும் ஜெனிவா(Video)
வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற கோட்பாடு ரணில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு விடுத்த அழைப்பிலே உடைக்கப்பட்டுள்ளது என மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
மேலும் தெரிவித்ததாவது,தமிழ் அரசியல்வாதிகளுடனான பேச்சுவார்த்தைக்கு ரணில் வடக்கிலுள்ள அரசியல்வாதிகளையே அழைத்தார். இதன்போதே வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற கோட்பாடு உடைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அழைப்பு விடுக்கப்பட்டதை போன்று அங்கு இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெறவில்லை. மாறாக சர்வகட்சி கூட்டமாகவே இது அமைந்தது. எனவே இதை தமிழ் தரப்புடனான பேச்சுவார்த்தை என நாம் கூற முடியாது.
அடுத்த வருடம் மார்ச் மாதம் ஜெனிவாவால் வழங்கப்படவுள்ள அறிக்கை, ரணில் அரசாங்கத்தை பாராடுவதாகவும் இலங்கை மக்களின் ஜனநாயக பிரச்சினைக்கான ஒரு தீர்வாகவும் இந்த கலந்துரையாடலை காட்சிப்படுத்துவதற்காகவே ரணில் இவ்வாறு செயற்படுகின்றார்.”என தெரிவித்துள்ளார்.