ரஷ்ய இராணுவத்தின் முடிவுகளால் அதிர்ச்சியில் அமெரிக்க புலனாய்வுத்துறை (Video)
உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம் ஏறத்தாழ 96 மணிநேரத்திற்குள் முடிந்துவிடும் என அமெரிக்க புலனாய்வுத்துறை கணித்திருந்த போதும் அது நடக்கவில்லை என கலாநிதி பிரபாகரன் என அனைவராலும் அறியப்பட்ட இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஆரம்பித்தபோது, தனது முழு பலத்தையும் அல்லது தன்னிடம் இருக்கின்ற நவீன ஆயுதங்களில் பெரும்பாலானவற்றையும் ரஷ்யா பயன்படுத்தும்.
அவ்வாறு பயன்படுத்தினால் இந்த யுத்தம் ஏறத்தாழ 96 மணிநேரத்திற்குள் முடிந்து விடும் என்று தான் அமெரிக்காவின் புலனாய்வு துறை தெரிவித்திருந்தது.
ஆனால் ரஷ்யாவின் வியூகம் யாராலும் கணிக்க முடியாதபடி அமைந்துவிட்டது. உக்ரைனை பொறுத்தவரை ஒரு தற்காப்பு நிலைக்கு பழக்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சிகளை மேற்குலகம் வழங்கியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய விடயங்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,