விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் முக்கிய சமிக்ஞை! மேஜர் மதன் குமார்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் இந்தியா எவ்வாறு நடந்து கொள்ளும் என்பது தொடர்பில் இந்திய இராணுவத்தின் முன்னாள் மேஜர் தர அதிகாரி மதன்குமார் தனது நிலைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வருகிறார் என்றால் இதற்கு நான் ஒரு சமிக்ஞையை கூறுகிறேன்.
ஏழு பேர் விடுதலை, ரஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்பு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட அந்த ஏழு பேர் விடுதலையின் போது இன்று பாஜக ஆளக்கூடிய மத்திய அரசு அதை எதிர்க்கவில்லை.
நீதிமன்றில் குறிப்பிடப்பட்ட கருத்துக்களை பார்த்தால் இதை பெரிய அளவிற்கு எதிர்க்கவில்லை. இரண்டாவது இந்த கொலை வழக்கில் தொடர்ந்திருந்த கமிஷன் கிட்டத்தட்ட காலாவதியாகிவிட்டது. இதனை பெரிய ஒரு அரசியல் பிரச்சினையாக பாஜக எடுத்துச் செல்லவில்லை.
இதையே ஒரு சமிக்ஞையாக எடுத்துக் கொள்ள முடியும். பிரபாரன் நாளைக்கு வருகிறார் என்ற சூழ்நிலை வந்தால் பழைய விடயங்களை எடுத்துக் கொண்டு வந்து இந்தியா அணுகாது என தான் நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.