தொழில் தேடி வெளிநாடு சென்ற இலங்கை இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை
நாட்டில் நிலவும் கடும் பொருளாதார, அரசியல் நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டு, தொழில் தேடி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு சுற்றுலா விசாவில் சென்ற இளைஞர், யுவதிகள் பலர் தொழில் வாய்ப்பின்றி அனாதரவான நிலைமையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழில் வாய்ப்பை இலகுவாக தேடிக்கொள்ளக் கூடிய வெளிநாடு ஐக்கிய அரபு ராஜ்ஜியம் என்று எண்ணும் இளைஞர், யுவதிகள் அந்நாட்டை நோக்கி செல்கின்றனர்.
ஏமாற்றும் போலி வேலை வாய்ப்பு முகவர்கள்
இப்படி சென்ற பலர் பல மாதங்களாக தொழில் வாய்ப்பு கிடைக்காது யாசகம் பெறும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன.
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபி, டுபாய், சார்ஜா, ரஸல் ஐ கைமா, அஜ்மான், புஜேரா உள்ளிட்ட பல நகரங்களுக்கு தொழில் தேடிச் சென்றவர்கள், தொழிலை தேடிக்கொள்ள முடியாது பரிதாபத்திற்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.
போலி வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள் சுமார் 4 லட்சம் ரூபா பணத்தை அறிவிட்டு, சுற்றுலா விசாவில் இளைஞர், யுவதிகளை ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் உள்ள பல இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வாழ்க்கை நடத்த யாசகம் பெறும் இளைஞர், யுவதிகள்
எனினும் தொழில் கிடைக்காது இந்த இளைஞர், யுவதிகள் பட்டினியில் பாலை வனங்களில் நடந்து திரிகின்றனர்.
பல போலி நிறுவனங்கள் அரசின் சிறப்பான நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் திர்ஹாம்களை( 4 லட்சத்து 90 ஆயிரம் ரூபா) சம்பளம் பெறக் கூடிய தொழில்கள் இருப்பதாக கூறி இளைஞர், யுவதிகளை ஏமாற்றி பணத்தை அறவிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் வெப்ப நிலையானது தற்போது 50 பாகை செல்சியஸை விட அதிகமாக இருக்கின்றது.
இலங்கையில் இருந்து தொழில் வாய்ப்பு தேடிச் சென்ற இளைஞர், யுவதிகள் கடும் வெய்யிலில் தொழில் தேடி வருவதுடன் அன்றாடம் வாழ்க்கையை கொண்டு நடத்த பணத்தை பெற்றுக்கொள்ள யாசகம் பெறுவது பரவலான காட்சிகளாக மாறியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
