லெபனானில் தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கு திட்டமிட்டுள்ள ஐக்கிய அரபு இராச்சியம்
லெபனானின் (Lebanon) பெய்ரூட்டில் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் தனது தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) திட்டமிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இராஜத்திர அதிகாரிகள் சிலர் லெபனானுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லெபனானில் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி
லெபனானின் அப்போதைய அமைச்சர் ஒருவர் சவூதி தலைமையிலான கூட்டணியின் ஈடுபாட்டை விமர்சித்ததைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவுடன் இணைந்து, ஐக்கிய அரபு இராச்சியம் லெபனானில் இருந்து தனது தூதர்களைத் திரும்பப் பெற்றது
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுனும் (Joseph Aoun) தூதரகத்தை மீண்டும் திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் அண்மையில் கலந்துரையாடியுள்ளனர்.
மீண்டும் தூதரக நடவடிக்கைகளை ஆரம்பிப்பது லெபனானில் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை ஆதரிப்பதற்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆர்வத்தையும், பல்வேறு துறைகளில் லெபனான் மக்களுக்கு விரிவான ஆதரவை வழங்குவதற்கான அதன் உறுதியான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது என்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபரில் பெய்ரூட்டில் உள்ள அதன் தூதரகத்தை மூடியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |