இலங்கைக்கு நிலக்கரி வழங்க ஐக்கிய அரபு இராச்சிய நிறுவனத்திற்கு அனுமதி
இலங்கைக்கு 1.47 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (ரூ. 524 பில்லியன்) பெறுமதியான நீண்ட கால நிலக்கரி விநியோகத்துக்காக கோரப்படாத முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
நான்கு நிறுவனங்கள் இந்த முன்மொழிவுகளை வழங்கியிருந்தன.
அதில் துறையில் அனுபவம் இல்லாத சீன நிறுவனம் ஒன்றும் உள்ளடங்கியிருந்தது.
ஐக்கிய அரபு இராச்சிய நிறுவனம்

இதனையடுத்தே ஒரு மெட்ரிக் தொன்னுக்கு 328.22 அமெரிக்க டொலர் என்ற சிறந்த விலையை வழங்கிய ஐக்கிய அரபு இராச்சிய நிறுவனத்துக்கு நிலக்கரி விநியோகத்துக்கான உரிமம் வழங்கப்படவுள்ளது.
இந்த நிறுவனம் ஏற்கனவே இலங்கையின் எரிபொருள் துறையில் விநியோகத்தை மேற்கொண்டு வரும் நிறுவனமாகும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸைத் தலைமையிடமாகக் கொண்ட டி.எம்.சீ.சீ ( DMCC) என்ற இந்த நிறுவனம், நிலக்கரியை இலங்கைக்கு வழங்கவுள்ளது.
மூன்று ஆண்டு ஒப்பந்தம்
இந்த நிறுவனம், மூன்று ஆண்டு ஒப்பந்தம் மூலம் முதல் ஆண்டில் (2022-23) 1.25 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரிக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
இரண்டாம் ஆண்டில் 2.25 மில்லியன் மெட்ரிக் தொன், மூன்றாம் ஆண்டில் 1.25 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரியையும் வழங்கவுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் பூஜ்ஜிய சதவீத வட்டி மற்றும் ஆறு மாத கடன் ஆகியவை அடங்கும் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam