தலிபான் படைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்க இராணுவத்தளபதி
ஆப்கானிஸ்தானில் தாலிபன் படைகள் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி வரும் நிலையில் அமெரிக்க இராணுவ கூட்டுப்படைகளின் தலைவர் மார்க் மில்லே(Mark Milley) தலிபான் படைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் ஆட்டம் முடிந்துவிட்டதாக தாலிபன்கள் கருத வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 212 மாவட்டங்களைக் கைப்பற்றி விட்டதாக தாலிபன் பிரச்சாரம் செய்து வருகின்றது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க் மில்லே(Mark Milley), மொத்தம் உள்ள 419 மாவட்டங்களில் பாதியைத் தான் தாலிபன் கைப்பற்றியது என்றும் ,34 மாகாணத் தலைநகர்களில் ஒன்று கூட தாலிபன் வசம் இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் பக்ரீத்தை முன்னிட்டு வன்முறைகள் தணிந்திருப்பதாகவும் அமைதிக்கான பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri