காசாவில் பட்டினியால் இறக்கும் மக்கள் - இராணுவ விமானங்கள் மூலம் உணவு விநியோகம்
அமெரிக்கா, ஜோர்டானுடன் இணைந்து காசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை விமானங்கள் மூலமாக 'ஏர் டிராப்' செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இராணுவ விமானங்களை பயன்படுத்தி 38,000 பெறுமதியான உணவுகளை காசாவுக்குள் எறிய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு
இந்நிலையில், ரஃபா நகரில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பகுதியில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருதரப்பு போரை நிறுத்தக்கோரி பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இருப்பினும் இன்னும் காசாவில் போர் ஓய்ந்தபாடில்லை. நாளுக்கு நாள் உயிர் பலிகள் அதிகரித்து வண்ணம் இருக்கின்றன.
அத்துடன் சிலதினங்களுக்கு முன்னர் காசாவில் உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுமார் 104 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். சுமார் 300 பேர் காயமடைந்தனர்.
மேலும், காசாவில் இதுவரை 30,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri