காசாவில் மனிதாபிமான நெருக்கடி - இஸ்ரேல் தாக்குதலில் பணயக் கைதிகள் பலர் பலி
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 7 பிணை கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி 250 பேரை பிணை கைதிகளாக கடத்தி சென்ற ஹமாஸ் போராளிகள், இதுவரை 100 பேரை விடுதலை செய்துள்ளனர்.
ஹமாஸ் வசம் பிணை கைதிகள் 130 பேர் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துவருகின்றது.
இந்நிலையில் , இதுவரை 70க்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
காசா முழுதும் விரைவில் பஞ்சம்
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் அந்த முற்றுகை நிலத்தின் வடக்கில் விரைவில் பஞ்சம் ஏற்படும் அச்சுறுத்தல் உருவாகி இருப்பதாக உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.
கடந்த ஜனவரி 23 ஆம் திகதி தொடக்கம் வடக்கு காசாவுக்கு உதவிகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
காசாவில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்திருப்பதோடு பிரதான ஐ.நா. அமைப்பினால் அதனை கையாள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு
‘எந்த மாற்றமும் நிகழாத பட்சத்தில், வடக்கு காசாவில் விரைவில் பஞ்சம் ஏற்படும்’ என்று உலக உணவுத் திட்ட பிரதி நிறைவேற்று பணிப்பாளர் கார்ல் சகாவு ஐ.நா பாதுகாப்புச் சபையில் தெரிவித்துள்ளார்.
உதவி வாகனங்கள் வடக்கு காசாவுக்கு செல்ல அனைத்தும் திட்டமிடப்பட்டபோதும் இஸ்ரேலிய நிர்வாகம் அண்மைய வாரங்களாக அனுமதி மறுத்து வருகிறது.
கடைசியாக கடந்த ஜனவரி 23 ஆம் திகதியே அந்தப் பகுதிக்கு உதவிகள் செல்ல அனுமதிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |