வீதி விபத்தில் சிக்கிய இரு இளைஞர்கள்: ஸ்தலத்திலேயே ஒருவர் பலி!
புத்தளம் - அனுராதபுரம் பிரதான வீதியின் சிறாம்பியடி இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று(06.01.2024) இடமமபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விபத்தில் மற்றுமொருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.
நேருக்கு நேர் மோதி விபத்து
வவுனியாவிலிருந்து - கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் புத்தளம் கருவலகஸ்வெவ 8ம் கட்டைப் பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், விபத்தில் சிக்கிய மற்றுமொருவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 17 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri