வாகன ஏல விவகாரம்! திணைக்களங்களுக்கு அரசாங்கம் விசேட அறிவிப்பு
அதிக எஞ்சின் திறன் கொண்ட வி8 உள்ளிட்ட சொகுசு வாகனங்களை ஏலம் விட்டு அதற்கான வருமான விபர அறிக்கையை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளர்கள் உட்பட அனைத்து அரச திணைக்களங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சின் செயலாளரால், அரச திணைக்களங்களின் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
1800சிசிக்கு மேல் எஞ்சின் திறன் கொண்ட பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 2300சிசிக்கு மேல் எஞ்சின் திறன் கொண்ட டீசல் வாகனங்கள், சுங்கத்தின் அட்டவணை (அ) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த (எச்எஸ்) 87.03 பிரிவின் இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏலம் விடப்படும் வாகனங்கள்
இவ்வாறு ஏலம் விடப்படும் வாகனங்களை எந்தவொரு அரசாங்க நிறுவனமும் கொள்வனவு செய்யக்கூடாது எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுச் சொத்துக்கள் மீதான முறைகேடுகளைத் தடுப்பதற்கும், அரசு நிதியை திறம்பட பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கும் அனைத்து அரசு வாகனங்களையும் முறையாகப் பயன்படுத்துவதை ஆவணப்படுத்துவது, பராமரித்தல் மற்றும் பதிவு செய்வது அனைத்து அரசு நிறுவனங்களின் தலைவர்களின் கட்டாயப் பொறுப்பாகும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நிறுவனத்தின் தலைமை கணக்கு அதிகாரியால் வாகனங்களின் தேவையை மதிப்பீடு செய்த பிறகு, பொருளாதார ரீதியாக இலாபம் இல்லாத மற்றும் நிறுவனத்தின் பயன்பாட்டிற்கு தேவையில்லாத மோட்டார் வாகனங்கள் அரசாங்க கொள்முதல் முறையின் மூலம் அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri