இலங்கையில் விளையாட்டுத்துறைக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க தயாராகும் அண்டை நாடு
இலங்கையின் விளையாட்டு வளர்ச்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா (Santosh Jha) மற்றும் இலங்கையின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
இருதரப்பு உறவு
கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டுகளில் கவனம் செலுத்தி, இலங்கை முழுவதும் விளையாட்டு மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று, இந்த சந்திப்பின்போது, இந்திய உயர் ஸ்தானிகர் உறுதியளித்துள்ளார்.

இருதரப்பு உறவுகளை, குறிப்பாக இளைஞர் விவகாரத் துறையில் மேலும் வலுப்படுத்தும் இலக்கை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்திய இளைஞர் விவகாரப் பிரிவுக்கு வருகை தருமாறு இலங்கையின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சரை உயர்ஸ்தானிகர் ஜா அழைத்துள்ளார்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam